மன்னார்-கரிசலில் புதிய பள்ளிவாசல்
மன்னார் மாவட்டத்தின் கரிசல் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிவாசலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான றிஷாட் பதியுதீன் நேரில் சென்று பார்வையிட்டார்.
இவ்விஜயத்தின் போது, பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் அலாவுத்தீன், மன்னார் பிரதேச சபை தவிசாளர் ஜப்ரான், உப தவிசாளர் புர்ஹான், பள்ளிவாசல் அதிபர் பழீல், இணைப்பாளர் முனவ்வர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
சமூக நலன் மற்றும் இறை சேவையை முதன்மையாகக் கொண்டு, இவ்வழகிய பள்ளிவாசல் மாளிகை சமூக செயற்பாட்டாளர் அல்-ஹாஜ் அலாவுத்தீனால் அவரது சொந்த நிதியிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





