மன்னாரில் பிடிபட்ட 500 கிலோ எடையுள்ள பாரிய மீன்!
மன்னார் மாவட்டம் முத்தரிப் புத்துறை அருகே 500 கிலோகிராம் எடையுள்ள ஒரு பெரிய திருக்கை மீன் பிடிபட்டுள்ளது.
நேற்று காலை கடலுக்குச் சென்ற மீனவர்களின் மீன்பிடி வலைகளில் இந்தம் பெரிய மீன் சிக்கியது.
இந்த மீனின் நிறை அதிகமாக இருந்ததால், அதை ஒரே படகில் கரைக்கு கொண்டு வர முடியவில்லை.
இறுதியாக, அவர்கள் அதனை கயிற்றால் கட்டி கடந்து கரைக்கு இழுத்து வரவேண்டியிருந்தது.
இந்த அரிய மீனைக் கடற்கரையில் ஏராளமான மக்கள் கூடினர்.