
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம்
மன்னார் மாவட்டத்தில் 50 எம்.டபிளியு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான டென்டர் கோரப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டமானது இடம்பெயரும் பறவைகளின் பாதையில் (பறக்கும் பாதை) உள்ளது, அங்கு பறவைகள் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வந்து முதல் காலாண்டின் இறுதியில் வெளியேறுகின்றன.
இதனை கருத்தில் கொண்டு, பறவைகளின் வருகையை இனம்கண்டு காற்றாலையானது பிளேடுகள் இயக்கத்தை தானாக நிறுத்தும் வகையில் ரேடரின் உதவிகொண்டு இயங்கும் காற்றாலைகளை உருவாக்குவதற்கான டென்டர்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
