மன்னாரில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம்

மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்துக்கு எதிராக இன்று மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இன்று காலை 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமாகிறது.

இந்தப் போராட்டத்தின் இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.

இதேநேரம் மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பகுதியில் அமைதி வழிப் போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.