மன்னம்பிட்டி விபத்து : உயிரிழப்பு அதிகரிப்பு!
பொலனறுவை – மன்னம்பிட்டி கொட்டலிய பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து வழங்கப்பட்ட வீதி அனுமதி பத்திரத்துக்கு புறம்பாக பயணித்துள்ளமை தெரியவந்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில் 12 பேர் பலியானதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ள 6 பேரை தேடி, கடற்படை மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இந்தநிலையில் விபத்து தொடர்பில் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, கிழக்கு மாகாணத்துக்குள் மாத்திரம் பயணிப்பதற்கே குறித்த பேருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்காரணமாக குறித்த பேருந்து வடமத்திய மாகாணத்துக்குள் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட முடியாது.
இந்த விடயம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அவ்வாறான எந்த அனுமதி பத்திரமும் வழங்கப்படவில்லை.குறிப்பாக கதுருவெலயில் இருந்து காத்தான்குடி அல்லது கல்முனை வரையில் பயணிப்பதற்காக எந்தவித பேருந்து அனுமதி பத்திரமும் வழங்கப்படவில்லை.
விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளருக்கு 7 பேருந்துகள் உள்ளதாகவும் அவற்றில் 6 பேருந்துகளுக்கு இவ்வாறான முறையற்ற அனுமதி பத்திரங்களே பெறப்பட்டுள்ளதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
அத்துடன் கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபையே இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை குறித்த விபத்து தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் விபத்துக்குள்ளானவர்களுக்கு தேவையான உடனடி உதவிகளை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மனம்பிட்டி விபத்தில் உயிரிழந்த 12 பேரில் 2 கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் உள்ளடங்குகின்றனர் இவர்கள் கல்முனை அக்கரைப்பற்று பகுதியினை சேர்ந்தவர்களாகும்
உயிரிழந்தவர்களில் 14 வயதான சிறுவன் ஒருவரும் அடங்குவதாக பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சம்பத் இந்திக்க குமார தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை காலை வரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர் காயமடைந்து பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களும் உள்ளடங்கின்றனர்
உயிரிழந்தவர்களில் 9 பேரின் சடலங்கள் பொன்னறுவை வைத்தியசாலையிலும்இமற்றைய சடலம் மன்னம்பிட்டி வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Beta feature
Beta feature
Beta feature
Beta feature