மன்னம்பிட்டி விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு!

மன்னம்பிட்டி கொட்டலி பாலத்தில் சற்றுமுன்  கல்முனை நோக்கி வந்த பஸ் ஒன்று வீழ்ந்து விபத்து

கதுருவெலயில் இருந்து 7.30மணிக்கு கல்முனை நோக்கி புறப்பட்ட சச்சின் பஸ் எனும் தனியார் பேரூந்தே விபத்துக்குள்ளாகியதுடன் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் உடல்கள் பொலனறுவை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் குறித்த பகுதியில் கல்முனையை சேர்ந்த வைத்தியர் ஒருவரின் குடும்பத்தினர் பயணித்த வான் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகி 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்