மன்னம்பிட்டி விபத்து : அடையாளம் காணப்பட்ட சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது!

மன்னம்பிட்டி விபத்தில் உயிரிழந்து அடையாளம் காணப்படாமல் இருந்த 3 சடலங்களும் அடையாளம் காணப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னம்பிட்டி பேருந்து விபத்தில் உயிரிழந்து அடையாளம் காணப்படாமல் இருந்த 3 சடலங்களும் அடையாளம் காணப்பட்டு பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி நாவலடி கேணி நகர் அக்பர் ஜூம்ஆ பள்ளி மையவாடியில் இன்று புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த 3 சடலங்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.