
மன்னம்பிட்டி பேரூந்து விபத்து : தற்போதைய நிலவரம்!
மன்னம்பிட்டி கொட்டலி பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தனியார் பேரூந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
அதன்படி, ஏறாவூரை சேர்ந்த 2 ஆண்கள் மற்றும் 1 பெண் உட்பட மூவரும், ஒலுவிலை சேர்ந்த ஆண் ஒருவரும், ஓட்டமாவடியை சேர்ந்த 2 ஆண்கள் 1 பெண் உட்பட மூவரும்,
பொலன்னறுவையை சேர்ந்த ஒருவரும், அளவ்வையை சேர்ந்த ஒருவரும், ஆனமடுவயை சேர்ந்த ஒருவரும், ஹலாவத்தயை சேர்ந்த ஒருவரும் என 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 40 பேரில் 25 பேர் பேர் சிகிச்சை பெற்று தற்போது வைத்திசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். ஏனைய 15 பேரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
