மனைவி வெளிநாட்டில் : குடித்துவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்

-திருகோணமலை நிருபர்-

மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலைக்காக சென்ற மனைவி வேலை கஷ்டம் எனக் கூறி வீட்டை விட்டு வெளியேறி தூதரக தடுப்பு காவலில் இருக்கின்றமையினால் கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட நாவற்சோலை பகுதியில் இச்சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை  இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான குச்சவெளி -நாவற்சோலை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் பிரதீபன் (36 வயது) எனவும் தெரிய வருகின்றது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

அவருடைய மனைவியான வசந்தி என்பவர் மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலைக்காக சென்று மூன்று மாதங்களான நிலையில் சென்ற வீட்டை விட்டு வெளியே சென்று தூதரக தடுப்பில் இருப்பதாகவும் தெரிய வருகின்றது.

இந்நிலையில் மனைவியின் கஷ்ட நிலமை குறித்து கவலைப்பட்ட கணவர், மது அருந்துவிட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் குச்சவெளி பொலிஸாரினால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.