மனைவி ஆசிரியர் வேலைக்குச் செல்வது பிடிக்காமல் பள்ளிப் பேருந்தின் முகப்புக் கண்ணாடியை அடித்து உடைத்த கணவர்
இந்தியாவில் கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த அடரியில் மனைவி ஆசிரியர் வேலைக்குச் செல்வது பிடிக்காமல் பள்ளிப் பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்த கணவரைப் பிடித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
மனைவி அங்குள்ள கலைமகள் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இன்று புதன்கிழமை காலை பள்ளிப் பேருந்துக்காகக் காத்திருந்தவரிடம் மது போதையில் வம்பிழுத்த கணவர், பேருந்து வந்ததும் மனைவி ஏற முயன்றதால் ஆத்திரமடைந்து கீழே கிடந்த கட்டை ஒன்றை எடுத்து அதன் முகப்புக் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
