மனைவியை கொலை செய்த கணவன்!

தந்தை ஒருவர் தனது மகள் மற்றும் மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ள சம்பவம் ஒன்று புத்தளம் ஹஸ்திபுர பகுதியில் பதிவாகியுள்ளது .

நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் புத்தளம், கல்லடி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது .

மேலதிக விசாரணைகளை புத்தளம்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.