மனைவியை அழைத்துவரச் சென்ற புதுமாப்பிள்ளை: வியக்க வைத்த மாமியாரின் உபசரிப்பு
இந்தியாவில் ஆந்திராவில் மனைவியை அழைத்துவரச் சென்ற புதுமாப்பிள்ளைக்கு 100 வகை உணவு வகைகளைப் பறிமாறிய மாமியாரின் உபசரிப்பு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த ரவி தேஜா என்பவருக்கும் ரத்னகுமாரிக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் தமிழ்நாட்டில் ஆடி மாதத்தைப் போல ஆந்திராவில் ஆஷாட மாதத்தையொட்டி தனது மனைவியை பிரிந்திருந்த கணவர், மீண்டும் தனது மனைவியை அழைத்துச் செல்ல அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதன்போது மருமகனுக்கு 100 வகையான உணவுகளைப் பரிமாறிய மாமியாரின் உபசரிப்பு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
