மனைவியுடன் தொடர்பு: கணவன் செய்த காரியம்

கிரிந்த புஸ்தோலமுல்ல பகுதியில் நேற்று வியாழக்கிழமை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புஸ்தோலமுல்ல பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபரே குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

காயமடைந்தவர் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் மனைவியுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.