மனைவியின் வீட்டிற்கு சென்று உயிரை மாய்த்துக் கொண்ட இளம் குடும்பஸ்தர்!

-மட்டக்களப்பு நிருபர்-

வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தும்பாலை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தும்பாலை திக்கோடை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிவப்பிரகாசம் சிலோஜன் (வயது – 29) என்பவரே இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டவராவார்.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றின் காரணமாக தனது வீட்டை விட்டு சென்று, தனது தாயாருடன் வாழ்ந்து வந்த நிலையில், ஏழு மாதங்களின் பின்னர் தனது மனைவியின் வீட்டுக்கு சம்பவ தினத்தன்று வந்திருந்த நிலையில் தனது வீட்டின் அறையினுள் தனக்குத்தானே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமாரின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும்படி சட்ட வைத்திய அதிகாரியிடம்  தெரிவித்தார்.

விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்