
மனைவியின் போலி நிர்வாணப் படங்களைப் பகிர்ந்த கணவரை நிரபராதி என அறிவித்த நீதிமன்றம்
மனைவியின் போலி நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவரை நிரபராதி என தெரிவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு ஒன்ராறியோ நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த தீர்ப்பை நீதிபதி அறிவித்துள்ளார்.
குறித்த நபரின் நடத்தை “தார்மீக ரீதியாக கண்டிக்கத்தக்கதாகவும், வெளிப்படையாக கூறினால், ஆபாசமாகவும்” இருக்கலாம் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
எனினும், குற்றவியல் சட்டத்தின்படி அது குற்றமாகாது என நீதிபதி கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்ததான விசாரணைகளில் நிர்வாணப் புகைப்படத்தில் உள்ள உடல் அவருடைய மனைவியுடையது அல்ல எனவும் அது டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு குற்றவியல் சட்டத்தின் கீழ் நெருக்கமான படங்களின் வரையறைக்கு எந்த புகைப்படமும் பொருந்தவில்லை என்று நீதிபதி கூறி, நிரபராதி என தீர்ப்பளித்துள்ளார்.
