மனைவியின் தன்பாலின காதலை ஏற்று ஒரே வீட்டில் வாழும் முக்கோண காதல் தம்பதி
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி சேர்ந்த சன்னி என்ற நபர், தன்பாலின ஈர்ப்பாளர்களான தன்னுடைய இரண்டு மனைவிகளுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.
கடந்த 2003ம் ஆண்டு சன்னி என்ற நபர் இந்தியாவை சேர்ந்த ஸ்பீட்டி சிங் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், திருமணம் முடிந்த ஓராண்டுகளுக்கு பிறகு மனைவி ஸ்பீட்டி சிங் தன்னுடைய பழைய காதல் வாழ்க்கை குறித்து, அதாவது ஸ்பீட்டி சிங் 18 வயதுடைய பெண்ணாக இருக்கும் போது மற்றொரு பெண்ணுடன் லெஸ்பியன் உறவில் இருந்தது குறித்து கணவர் சன்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதற்கு எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்காத கணவர் சன்னி, தனது மனைவியுடன் தொடர்ந்து வாழ்க்கையை முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில் கலிபோர்னியாவை சேர்ந்த மற்றொரு இந்திய வம்சாவளியை சேர்ந்த பித்து கெளர் என்ற பெண்ணுக்கு மற்றொரு இந்திய ஆணுடன் கடந்த 2009ல் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆனால் இந்த திருமணம் நீண்ட காலம் நீடிக்காத நிலையில், இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.
இதையடுத்து பித்து கெளர் என்ற இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் குடியேறியுள்ளார்.
அங்கு சன்னி மற்றும் ஸ்பீட்டி சிங்குடன் பித்து கெளர் அறிமுகம் ஆகியுள்ளார், அப்போது தன்னுடைய விவாகரத்து குறித்து பித்து கெளர் பகிர்ந்து கொள்ளவே, அவருக்கு ஆறுதலாக இருக்கும் என்று ஒரு வாரம் தங்கள் வீட்டில் வந்து தங்குமாறு சன்னி-ஸ்பீட்டி சிங் தம்பதி அழைத்துள்ளனர்.
சன்னி-ஸ்பீட்டி சிங் வீட்டில் பித்து கெளர் தங்கி இருந்த போது, சன்னியின் மனைவியான ஸ்பீட்டி சிங்க்கும், பித்து கெளருக்கும் இடையே மனதளவிலும், உடலளவிலும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் கணவர் சன்னிக்கு தெரியவந்த போது, ஸ்பீட்டி சிங் மற்றும் பித்து கெளருக்கு இடையே ஏற்பட்ட காதல் உறவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பித்து கெளரை தன்னுடைய இரண்டாவது மனைவியாகவும் சன்னி ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த உறவின் மூலம் முக்கோண காதல் தம்பதிக்கு மேலும் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது.
தற்போது தன்பாலின ஈர்ப்பாளர்களான இரண்டு மனைவிகள், கணவர் சன்னி மற்றும் நான்கு குழந்தைகள் அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த உறவுக்கு மூவரின் உறவினர்களும் முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதனை பொருட்படுத்தாமல் ஒற்றுமையுடன் மூவரும் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்