மனைவியின் அந்தரங்க உறுப்பில் மின்னழுத்தியால் சூடு வைத்த கணவன்

கண்டியில் மின்னழுத்தியை (அயன் பொக்ஸ்) பயன்படுத்தி மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹத்தரலியத்த பொல்வத்த பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான மனைவியே இதன்போது பாதிக்கப்பட்டுள்ளதுடன் 34 வயதான கணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மனைவியின் தகாத உறவு குறித்து அறிந்து கொண்ட கணவன், மின்னழுத்தியால் மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

படுகாயங்களுக்கு உள்ளான மனைவி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட கணவன், கலகெதர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மே 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்