மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து 51 ஆண்களுடன் உறவுகொள்ள வைத்து வீடியோ எடுத்த கணவன்!

பிரான்ஸ் நாட்டில் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவருக்கே தெரியாமல் 51 ஆண்களுடன் உறவு கொள்ள வைத்ததுடன், அதனை வீடியோவாகவும் கணவர் ஒருவர் பதிவு செய்து வைத்துள்ளார் என பிரபல டெலிகிராஃப் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆல்ப்ஸ் கோட் மாகாணத்தின் மசான் பகுதியை சேர்ந்த டொமினிக் பிரான்கோயிஸ்  என்பவருக்கு திருமணம் நடைபெற்று 50 ஆண்டுகள் கடந்துள்ளது. டொமினிக் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், மசானில் உள்ள அவரது விருந்தினர் மாளிகையில் வைத்து மனைவிக்கு உணவில் மயக்க மருந்தை கொடுத்து, அதன்பின்னர் மற்ற ஆண்களுடன் கடந்த 10 ஆண்டுகளாக உறவுகொள்ள செய்து பாலியல் துன்புறுத்தலை மேற்கொண்டுள்ளார்.

மேலும் இந்த துன்புருத்தலின் போது டொமினிக்கின் மனைவிக்கு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 முதல் 2020 ஆண்டுகாலம் வரை இந்த துன்புருத்தல் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் 26 முதல் 73 வயதுக்கு உட்பட்ட 51 ஆண்கள் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுள் தீயணைப்பு வீரர்கள், லொறி சாரதி, நகராட்சி கவுன்சிலர், தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள், சிறைக் காவலர், நர்ஸ் உள்ளடங்குவதுடன் ஒருமுறை உறவுகொண்ட சிலர் மீண்டும் வந்து உறவில் ஈடுபட்டதாக பொலிஸார்தெரிவிக்கின்றனர்.

இன்டர்நெட்டில் இதற்காக குழு ஒன்று செயல்பட்டு வந்ததாகவும், அதில் ஏற்பட்ட தொடர்பால் தன் மனைவியை மற்ற ஆண்களுடன் டொமினிக் உறவு கொள்ளச் செய்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

அத்துடன் இங்கு வருபவர்கள் புகையிலை மது பயன்படுத்தக் கூடாது, காரை தூரத்தில் பார்க்கிங் செய்ய வேண்டும். ஆடைகளை சமையல் அறையிலேயே கழற்றி வைத்து விட வேண்டும். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரியாமல் இருக்க காரை தொலைவில் நிறுத்தி விட்டு இருட்டில் நடந்து வர வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை டொமினிக் விதித்திருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

இவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். தற்போது இந்த விபரங்கள் டொமினிக்கின் மனைவிக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் மனம் உடைந்து டொமினிக்கிடம் இருந்து விவாகரத்து அளிக்குமாறு அவர் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மேலும் இந்த பாலியல் துன்புருத்தலுடன் தொடர்புடைய அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்