மனைவிக்கு நேர்ந்த துயரம்

குடும்ப தகராறில் வீட்டின் மீது கணவர் பெட்ரோல் குண்டை வீசியதில், அவரது 40 வயதுடைய மனைவி தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்து இன்று வெள்ளிக்கிழமை அன்று உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் மெதகம, பரசங்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக்க தெரிவிக்கப்படுகிறது.

தம்பதியினரிடையே நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக கணவர் இன்று வௌ்ளிக்கிழமை அன்று வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெட்ரோல் குண்டினால் வீடு தீப்பிடித்து எரிந்ததோடு, மனைவி வீட்டினுள் தீப்பிடித்து மனைவி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்டார், அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து பரசங்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.