மனுஷ நாணயக்காரவிற்கு பிணை
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக அவர் இன்று வாக்குமூலம் வழங்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிலையிலேயே அவர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.