
மனித பாவனைக்குப் பொருத்தமற்ற பெருந்தொகை பருப்பு மீட்பு
மனித பாவனைக்குப் பொருத்தமற்ற சுமார் ஒரு டன் பருப்பு, நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பில் – புறக்கோட்டையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற சோதனையொன்றின்போதே மனித பாவனைக்குப் பொருத்தமற்ற குறித்த பருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
களஞ்சியசாலையுடன் தொடர்புடைய வர்த்தகர், பருப்பை மீளப் பதப்படுத்தி சந்தைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
