
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 30,000 கோதுமை மா மூடைகள் மீட்பு!
வத்தளையின் எலகந்த பகுதியில் உள்ள ஒரு களஞ்சியசாலையில், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற 30,000 கோதுமை மா மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா மூடைகளை நுகர்வோர் அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது.
குறிப்பிட்ட கோதுமை மா மூடைகள் நேற்று புதன்கிழமை சந்தைக்கு விநியோகிக்கத் தயாராக இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.
