மனஅழுத்தம் குறைவடைய சில குறிப்புகள்
வேலையிடத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க சில குறிப்புகள்:
வேலை பழு காரணமாகவும் பல்வேறு விஷயங்கள் காரணமாகவும் ஏற்படும் ஒரு வகை பதட்டம் தான் இந்த மனஅழுத்தம். வேலையிடத்தில் ஏற்படும் மன அழுத்தம், சோர்வு ஏற்படாமல் இருக்க வேலை அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியம். இதன்மூலம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
🛑தியானம் :
தியானம்செய்வதன் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும்.மனதை ஒருமுகப்படுத்தவும், அழுத்தமான எண்ணங்களை தவிர்க்கவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது
🛑உடற்பயிற்சி :
தினமும் ஏதாவதொரு உடல்பயிற்ச்சி ஆசனம் செய்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். ஒரு நாளில்
குறைந்தது 20 நிமிடம் நடைபயிற்சி போன்ற எளிமையான பயிற்சி செய்தால் உங்களது எண்டோர்பின்கள் உயர்த்தப்பட்டு பதட்டம், கவலைகள் நீங்கும்.
🛑ஊட்டச்சத்து உணவு :
பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உங்களது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உங்களது உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் வழங்கும். இதனால் உங்களது மனநிலை ஆரோக்கியமாக இருக்கும்.
🛑சகஜமான பேச்சு:
உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம், நண்பர்களிடம் அல்லது உங்களுக்கு பிடித்தவர்களிடம் இது குறித்து பேசுங்கள். இதனால் உங்களது மன அழுத்தம் குறையும்.
🛑சரியான தூக்கம்:
ஒரு நாளைக்கு சுமார் 7-8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும்.எனவே, உங்களது மனம் அமைதி அடைவதற்கு இரவு நன்றாக தூங்குங்கள். இதற்கு நீங்கள் இரவு நேரத்தில் கைத் தொலைபேசியை அதிகம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
முக்கியமாக குறித்த நேரத்தில் வேலையை செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கான நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் அடுத்தநாள் உங்களை புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய தூண்டும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்