
மத வழிபாட்டில் ஈடுபட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள்
-மூதூர் நிருபர்-
திருகோணமலை – வெருகல் பிரதேச சபைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் வெருகல் – ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஷ்தானத்திற்குச் சென்று இன்று திங்கட்கிழமை காலை சென்று மத வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதன்போது வெருகல் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் கோயில் நிருவாகத்தினால் மங்கள வாத்தியங்களோடு ஆலயத்திற்கு வரவேற்கப்பட்டனர்.
ஆலயத்தில் ஆசி வேண்டிய விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வெருகல் பிரதேச சபையில் மொத்த உறுப்பினர்கள் 13 பேரில் 08 உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வெருகல் பிரதேச சபையை இலங்கை தமிழரசு கட்சி தனித்து நின்று ஆட்சி அமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Beta feature