மத்தீஷவிற்கு பதில் டில்ஷான் மதுசங்க
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண உபாதை காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக டில்ஷான் மதுசங்கவை அணியில் இணைத்துக்கொள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது.
கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியின் போது, மதீஷ பத்திரணவின் இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவர் தொடரிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியுள்ளார்.
பத்திரணவிற்குப் பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளரான டில்ஷான் மதுஷங்கவை அணியில் இணைக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் முன்வைத்த கோரிக்கைக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தொழில்நுட்பக் குழு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள இலங்கை அணிக்கு மதுஷங்கவின் வருகை பந்துவீச்சு வரிசையில் கூடுதல் பலத்தைச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
