மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தை குறைக்கத் தீர்மானம்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச்சபை நேற்று திங்கட் கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கொள்கை வட்டி வீதத்தை ஐம்பது அடிப்படை புள்ளிகளால் குறைக்க தீர்மானித்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

 

இதன்படி, வழமையான வைப்புத்தொகை வசதி வீதம் 8.50 வீதமாகவும், வழமையான கடன் வசதி வீதம் 9.50 வீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 

தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார அபிவிருத்திகளை கருத்தில் கொண்டு, பணவீக்கத்தை நடுத்தர காலப்பகுதியில் இலக்கு மட்டத்தில் ஐந்து வீதத்தில் பேணுவதற்கு, பொருளாதாரம் அதன் எதிர்பார்ப்புகளை அடைய அனுமதிக்கும் வகையில், நாணய சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது.

 

கொள்கை வட்டி வீதத்தை குறைப்பதை விட சந்தை வட்டி வீதத்தை குறைக்க வங்கிகளும் நிதி நிறுவனங்களும் செயற்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது