மத்திய மாகாணத்தின் சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் விடுமுறை
மத்திய மாகாணத்தில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கு மத்திய மாகாண கல்வி திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நாளைய தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளமையினால், மறுநாள் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வலய கல்வி பணிப்பாளர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த நாளுக்கான கல்வி செயற்பாடுகளை எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், நாளை மறுதினம் மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண கல்வி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
