
மத்திய மலைநாட்டில் கனத்த மழை
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நீர் தேக்க பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக சாமிமலை ஓயா காட்மோர் ஓயா மறே ஓயா சியத்தகங்குல ஓயா மற்றும் சிற்றாறுகளில் வெள்ளம் பாய்ந்து உள்ளது.
காட்மோர் நீர்வீழ்ச்சி மறே நீர்வீழ்ச்சி லக்சபான நீர் வீழ்ச்சி மோகினி எல்லை நீர் வீழ்ச்சி என்பனவற்றில் அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக இப் பகுதியில் உள்ள அனைத்து நீர் ஓடைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
மவுஸ்சாகலை கென்யோன் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல காசல்ரீ விமலசுரேந்திர மற்றும் ஏனைய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்து வரும் நிலையில் உள்ளது.
எங்கே பார்த்தாலும் பணி மூட்டம் காணப் படுகிறது இதன் காரணமாக வாகன சாரதிகளை மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
