மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: இருவர் காயம்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வேன் விபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேன் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேனின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது வேனில் பயணித்த இரண்டு பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.