மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: ஒருவர் பலி
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 48.5ஆர் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு குருநாகலிலிருந்து மீரிகம நோக்கிச் பயணித்த வேன் அதே திசையில் பயணித்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் வேன் சாரதி உட்பட 07 பேர் காயமடைந்துள்ளதாகவும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாகொல தெற்கு பகுதியை சேர்ந்த 46 வயதுடையவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
சடலம் மீரிகம வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
