மத்தள விமான நிலையத்தில் புறப்பாடு வரி இன்று முதல் நீக்கம்
மத்தள சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புறப்பாடு வரி இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.
மத்தள விமான நிலையம் வழியாக நாட்டிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு 60 அமெரிக்க டொலர் புறப்பாடு வரி இனி வசூலிக்கப்படாது என்பதை உறுதிப்படுத்தும் விசேட சுற்றறிக்கையை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.
சுற்றறிக்கையின்படி, இது அடுத்த ஆண்டு ஜூன் 26 வரை அமுலில் இருக்கும்.
மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகமான விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
