மது போதையில் கோடரி தாக்குதல்: பெண் மரணம்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் மது போதையில் ஒருவர் கணவர் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்போபுர – 85 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த சிரோமாலா பெர்ணாந்து (வயது – 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

சந்தேக நபர் மது போதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த வேளை அவரின் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் சத்தம் போட வேண்டாம் எனக் கூறியதையடுத்து கோபம் கொண்ட குறித்த நபர் கணவன் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து படுகாயம் அடைந்த இருவரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்ததுடன் கணவர் சிகிச்சை பெற்று வருவதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோடரியால் தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்போபுர – 85 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஏ.டபிள்யூ.எம்.விக்ரமசிங்க (வயது – 54) என்ற சந்தேக நபரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.