
மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் கைது!
-சம்மாந்துறை நிருபர்-
மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்தோடு மோட்டார் சைக்கிளையும் சம்மாந்துறை போக்குவரத்து பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 09.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீட்புரம் சந்தியில், சம்மாந்துறை போக்குவரத்து பொலிஸார் கடமையில் இருந்த வேளை, சந்தேகத்திற்கிடமான சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தி,மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடந்தலாவை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரும் மற்றும் மஜீட்புரம் -மல்வத்தை 03 பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரும் என, 2 சந்தேக நபர்களும் மதுபோதையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை, சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைத்த போது, சந்தேக நபர்களுக்கு, தலா 35,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
குறித்த சோதனை நடவடிக்கையானது, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில், பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பதில் பொறுப்பதிகாரி ஏ. நஸார் தலைமையிலான, குழுவினரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
