மதுபோதையில் பொதுமகனை தாக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

-யாழ் நிருபர்-

குறிகட்டுவான் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை குடித்துவிட்டு மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் குறிகட்டுவான் பகுதியில், மது போதையில் கடமையில் ஈடுபட்டிருந்தார். இதன் போது வீதியால் சென்ற நபரை மறித்து அவருடன் முரண்பட்டு, அவர் மீது தாக்குதலை மேற்கொண்டார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமகன் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் தாக்குதலை மேற்கொண்ட ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், ஊர்காவல்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை இன்றையதினம் ஞாயிற்று கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்