
மதுபோதையில் பேருந்தில் ஏற முற்பட்டவர் கீழே விழுந்து உயிரிழப்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேருந்து வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது .
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
நடந்து சென்ற நபர் மதுபோதையில் வீதியின் நடுவே நின்று பேருந்தை மறித்தபோது, பேருந்தின் நடத்துநர் மறித்தவரை வீதியை விட்டு விலகி நிற்குமாறு பேசி விட்டு பேருந்தை எடுக்க முற்பட்டபோது, குறித்த நபர் தடக்கி வீழ்ந்தபோது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்து தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
