மதுபோதையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்பு தடை!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில், மதுபோதையில் குழப்பங்களை விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில், பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் உட்பட நான்கு மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு வருகை தந்தவர்களை தகாத வார்த்தைகளால் வசைபாடியமை மற்றும் மோதல் போக்கைக் கடைப்பிடித்தமை தொடர்பில், திரையிடலைக் காண்பதற்கு வருகை தந்தவர்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே, அவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்