
மதுபான போத்தல்களுக்குப் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர்களில் மாற்றம்
மதுபான போத்தல்களுக்கு தற்போது பயன்படுத்தப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் மாற்றப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நோக்கத்திற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த செயற்பாடு அமுலுக்கு வரவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
இதனூடாக தற்போது பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தவிர்க்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி குறித்த ஸ்டிக்கர்களில் உள்ள குறியீடுகள் மாற்றப்படவுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
