மதுபானங்கள் மற்றும் சிகரெட் விலைகள் அதிகரிப்பு

ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறிப்பிட்ட சில மதுபானங்கள் மற்றும் சிகரெட் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இலங்கையின் DCSL கம்பனி  உற்பத்தி செய்யும் மது வகைகளின் விலை சராசரியாக ரூ. 750 மில்லிக்கு 150 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரண்டு வகை சிகரெட்டுகளின் விலையும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக வரி அதிகரிப்புக்கு அமைவாகவே இந்த விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.