மண் வர்த்தகர் மண்ணுக்குள் புதையுண்டு பலி

மாவத்தகம பிரதேசத்தில் மண் வர்த்தகர்த்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவர் மண்ணுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்shர்.

வெவுட ஹரன்கஹகொட பிரதேசத்தில் வசிக்கும் ரணசிங்க சானக எரோஷன் (வயது – 43) என்ற வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கொட்டிகாபொல பிரதேசத்தில் நீண்ட காலமாக மண் வெட்டி விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வருபவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் தனது பெக்ஹோ இயந்திரத்துடன் பணிபுரிந்து கொண்டிருந்த போது ஆழமான குழியில் தவறி விழுந்ததாகவும், அவருக்கு மேல் மண் சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் நாற்பது நிமிடம் சிரமப்பட்டு மண்ணை அகற்றியதில் அவரது உடலை கண்டுபிடித்ததாகவும், அதற்குள் அவர் இறந்துவிட்டதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்