மண்வெட்டி மற்றும் கம்பியால் அடித்தும், கத்தியால் வெட்டியும் கொலை
கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீகஹமுலவத்தை – இப்பாகமுவ பிரதேசத்தில் மண்வெட்டியால் அடித்தும், கத்தியால் வெட்டியும், இரும்பு கம்பியால் அடித்தும் நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறந்தவரின் வீட்டில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூஜைக்காக, இறந்தவர் மற்றும் மற்றொரு நபர் வாழை இலைகளை வெட்டுவதற்காக அருகிலுள்ள வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் உயிரிழந்தவரையும் மற்றைய நபரையும் கடித்ததையடுத்து, அவ்வாறு செய்தமைக்கான காரணத்தைக் கேட்டு இடம்பெற்ற வாக்குவாதத்திலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளது.
இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்களும், ஐந்து ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
