மண்வெட்டி எடுத்து வராததால் மாணவனை தாக்கிய ஆசிரியர்
-யாழ் நிருபர்-
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவனை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கி உள்ளார்.
விவசாய பாடம் கற்பிக்கும் ஆசிரியர் மண்வெட்டியை எடுத்து வருமாறு மாணவன் ஒருவரிடம் கூறியுள்ளார்.
எனினும் குறித்த மாணவன் மண்வெட்டியை எடுத்து வரவில்லை. மாறாக வேறொரு மாணவன் மண்வெட்டியை எடுத்து வந்து ஆசிரியரிடம் கொடுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த ஆசிரியர் குறித்த மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார்.
காயம் அடைந்த மாணவனை பெற்றோர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு வழங்கினர்.
இந்நிலையில் குறித்த ஆசிரியரை கைது செய்த பொலிசார் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்