மண்மேட்டிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

நுவரெலியாவில் நேற்று புதன் கிழமை மண்மேட்டில் இருந்து வழுக்கி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த வெள்ளசாமி கருப்பையா (வயது – 71) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று மழை நேரத்தில் தனது தோட்டத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது 53 மீற்றர் உயரம் கொண்ட மண்மேட்டில் இருந்து வழுக்கி தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக இன்று வியாழக்கிழமை நுவரெலியா மாவட்ட பொது ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.