
மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
திம்புலபதன – மவுண்ட் வெர்னோன் தோட்டத்தில் வீடொன்றின் மீது பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 46 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
அவர் தனது சமையலறையில் இருந்த வேளையில் இந்த விபத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், சடலம் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹட்டன் – காமினிபுர பிரதேசத்தில் வீடொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் தம்பதியர் காயமடைந்துள்ளதுடன், வீடு பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
