மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு 140 மில்லியன் செலவில் அபிவிருத்தி!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 05 வது அமர்வு தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ் அமர்வுக்கு ஆளுங்கட்சி எதிர்கட்சி உறுப்பினர்கள் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது பிரதேச சபையின் தவிசாளராக பதவி ஏற்ற பின்னர் 140 மில்லியன் நிதி செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக, தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.

பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டதுடன், திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வைத்தால் மாத்திரமே எவராக இருந்தாலும் கழிவுகள் அகற்றப்படும் என தவிசாளரால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் , எதிர்கால கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.