மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீதிகள் புனரமைப்பு!

 

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பாடசாலை வீதி உள்ளிட்ட உள் வீதிகள் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் விவசாயிகள், மீனவர்கள் மற்றும்  பாடசாலை மாணவர்கள் பயணிக்க கூடிய அளவிற்கு போக்குவரத்து சேவையினை இலகுபடுத்தும் நோக்கில் வீதிகள் புணரமைக்கப்படுகின்றன.

புனரமைப்பு பணிகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் குகநாதன் உள்ளிட்டோர் நேற்று செவ்வாய்க்கிழமை  பார்வையிட்டனர்.

 

ககிருபாகரன்

மட்டக்களப்பு நிருபர்