
மண்ணெண்ணெய் நள்ளிரவு முதல் 253 ரூபாவால் அதிகரிக்கப்பு
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு ஞாயிற்றுக்கிழமை முதல் 253 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 87 ரூபாவிலிருந்து 340 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் லீற்றரின் புதிய விலை ரூ. 340 என, பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
