
மண்டூரிலிருந்து – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையான அரசபேருந்து சேவை ஆரம்பம்!
மட்டக்களப்பு-மண்டூரிலிருந்து களுவாஞ்சிக்குடி ஊடாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையான அரசபேருந்து சேவை இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மண்டூர்த் துறையடி ஆலயத்திற்கு அண்மையில் இருந்து, இன்று சனிக்கிழமை காலை 06.30 மணிக்கு குறித்த பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
மண்டூர் மக்கள் மற்றும் கிராம அபிவிருத்தி குழுக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசனின் ஏற்பாட்டில், களுவாஞ்சிக்குடி இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர் கோகுலவேந்தன் மற்றும் பிராந்திய முகாமையாளர் விஜிததர்மசேன ஆகியோரின் ஒழுங்கமைப்பில் இப் போக்குவரத்துச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது
