மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு  நாளை வியாழக்கிழமை காலை 8 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இது செல்லுபடியாகும்.

அதற்கமைய கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நிலதண்டாஹின்ன மற்றும் மத்துரட ஆகிய பிரதேசங்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை செல்லுபடியாகும்.

 

இதேவேளை, மேலும் 7 மாவட்டங்களுக்கு அவதானத்துடன் இருக்குமாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 12 மாவட்டங்களுக்கு விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.