மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு
தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (25) மாலை 4:00 மணி முதல் நாளை (26) மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மழைபெய்யுமாயின் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
