
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை செல்லுபடியாகும் என சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை பிரதேச செயலகத்திற்கு 2ஆம் கட்டத்தின் கீழ் அவதானமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை மற்றும் ஹாலியால, கண்டி மாவட்டத்தில் மெத தும்பற ஆகிய பகுதிகளின் 1 ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
